பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் சைக்கிள் ஓட்ட போட்டி..!
மட்/மம/ பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் முப்பதாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாகவும் பாடசாலையில் 2025 ஆம் ஆண்டுக்குரிய இல்ல விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வாக சைக்கிள் ஓட்டப் போட்டி புதன் கிழமை(12) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.பரீது தலைமையில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி பலமுனை பிரதான வீதியூடாக சென்று ஆரையம்பதி ஊடாக மட்டக்களப்பு வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இப் போட்டியில் டயமன்ட், கோல்ட்,பேர்ள் இல்ல மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று இருந்துடன் பாடசாலையின் அபிவிருத்தி குழு, பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பொலீஸ் உத்தியோகத்தர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(எம்.பஹத் ஜுனைட்)








