கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் வதிவிட வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி வாரியாபொலயில் உள்ள வடமேல் மாகாண பயிற்சி நிலையத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி பிரதேசத்திற்கான பொறுப்பாளர் சுப்புன் தலைமையில் இடம்பெற்றது.
வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன் இடம்பெற்ற இத் தலைமைத்துவ வெளிக்கள பயிற்சியின் போது வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கடந்த கால செயற்திட்டங்கள் மற்றும் 2025 ம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான செயற்த்திட்டம் பற்றியும் தெளிவூட்டப்பட்டது.
இதில் கற்பிட்டி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி செய்தியாளர் எம்.எச்.எம். சியாஜ்)