பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமாரவுக்குகெளரவம்
பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பல வருடங்களாக கடமையாற்றி நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித் பத்மகுமார சேவைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்று மக்கொனை திருமண வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பேருவளை பொலிஸ் பிரிவு ஆலோசனைக் கமிட்டி, சமூக பொலிஸ் கமிட்டி இணைந்து ஏற்பாடு செய்த, இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரமுகர்கள், பொலிஸ் நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை பொலிஸ் பிரிவில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதிலும் இன, மத, மொழி பேதமின்றியும் பொது மக்களுடன் மிக இனிமையாக பழகி சிறப்பான முறையில் தமது கடமைகளைச் செய்த பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித் பத்மகுமாரவினை பலரும் பாராட்டி பேசினர்.
இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
(பேருவளை பீ.எம் முக்தார்)