படைகளிலிருந்து தப்பிச் சென்றோரை உடன் கைது செய்ய உத்தரவு
பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்றுகாலை ஆராய்ந்தது.அதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் இந்த அறிவிப்பை சற்றுமுன்னர் விடுத்துள்ளார்.