புத்தளம் தெற்கு கோட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் நஜீபுக்கு பிரியாவிடை
புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் என்.எம்.எம் நஜீபை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி காரியாலய அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் முந்தல் சுமுது மண்டபத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எச் அர்ஜுன, புத்தளம் வலய நிர்வாக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் .ஐ.எம் நௌசாத் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள். அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)