நீதிமன்றங்களுக்கு வருவோர் கடுமையான சோதனை
புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து நேற்றும் இன்றும்
இங்கு வருகை தரும் சட்டத்தரணிகள் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்
இதனால் நீதிமன்ற வழக்குகளுக்கு செல்லும் அனைவரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
அனைவருக்கும் ஏற்பட்டுள்ள இந்த சங்கடமான நிலைமைக்கு கவலை தெரிவித்துள்ள கொழும்பு
மேல் நீதிமன்ற பதிவாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிமித்தம் இந்நடவடிக்கைக்கு பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்த ஏற்பாட்டுக்கு இணங்க சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அங்கு பொருத்தப்பட்டுள்ள SCAN உபகரணத்துக்கு உடலை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.