பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற நடவடிக்கைகள்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளின் விசாரணையை மீண்டும் தொடங்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜராவோரை மட்டும் நீதிமன்ற வளாகத்தில் வைத்திருக்கவும், வெளியாட்கள் அனைவரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றவும் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று கண்காணிப்புப் பயணம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று ஆய்வு செய்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
மூத்த பொலிஸ் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துப்பாக்கிச் கூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் இப்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைரேகைகளைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் குழுக்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளன.
மேலும், சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்வது உட்பட அனைத்து விசாரணைப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.