உள்நாடு

பேருவளை அபிவிருத்திக் குழுத் தலைவரின் மக்கள் சந்திப்புக்கான அலுவலகம்

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராய்ச்சியின் மக்கள் சந்திப்பிற்கான அலுவலகம் ஒன்று பேருவளை ஹெட்டிமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.

ஹெட்டிமுல்லை சந்திக்கும் ஹெட்டிமுல்லை ரயில் நிலையத்திற்கும் இடையே புதிய காரியாலயம் (26-2-2025) திகதி திறந்து வைக்க ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை தொகுதி மக்கள சிரமமின்றி பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்காக புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சர்வ மத தலைவர்கள் பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத்,பியூட்டி ஜெய்ஸ் அதிபதி அஹ்ஸர் ஸவாஹிர், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளன தலைவர் எம்.எச்.எம்.உவைன் உட்பட தொழிலதிபர்கள்,இரத்தினக்கல் வர்த்தகர்கள்,சமூக சேவையாளர்கள்,தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அலுவலகப் பிறப்பு விழாவின் பின்னர் பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராய்ச்சியிடம் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.

பேருவளை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது இத் தொகுதியின் துரித முன்னேற்றத்திற்காக உழைப்பதே தனது முக்கிய நோக்கமாகும். என்று பேருவளை மக்கள் தன்னை இக் காரியலயத்தில் சந்திக்கலாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இங்கு உரையாற்றும் போது கூறினார்.

குப்பை கூளங்களினால் மிகவும் அசித்தமடைந்துள்ள பேருவளை தொகுதியை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் துப்புரவு செய்வதுடன் இப்பகுதியில் சேரும் குப்பை குளங்களை வகைப்படுத்தி நவீன இயந்திரம் கொண்டு உரம் தயாரிக்க திட்டம் வகுத்துள்ளோம் பியூட்டி ஜெம்ஸ் அதிபதி அஹ்ஸர் சவாஹிர் இத் திட்டத்திற்கு உதவ இணக்கம் தெரிவித்துள்ளார்.

நீர் வடிந்தோட முடியாது தடைபட்டுள்ள வடிவான்களை சுத்தம் செய்வது வீதிகளை புனரமைப்பு நீர்ப்பாசனங்களை புனரமைத்து விவசாய உற்பத்தியை அதிகரிப்பது 24 மணி நேரமும் தடையின்றி குடிநீரை விநியோகிப்பது என்பன நமது வேலைத்திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் திட்டங்கள் வெற்றி பெற மக்களின் முழுமையான பங்காளிப்பு மிகவும் அவசியமாகும். எந்த அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கை என்றும் வீண் போகாது என்றார்.

பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத் பேசும் போது-
பேருவளை மக்களுக்கு ஒரு தலை சிறந்த பாராளுமன்ற பிரதிநிதி கிடைத்துள்ள நிலையில் அவர் மூலம் நாம் உச்ச பயனடைவோம் என்றார்‌.

பேருவளை முன்னாள் காதி நீதிபதி மிர்ஸூக் பளீல், பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மத் நஸ்ரின், இரத்தினக்கல் வர்த்தகர்களான காதல் ஹாஜியார்,அஷ்ரப் யூஸுப்,தேசிய மக்கள் சக்தி நகர சபை வேட்பாளர் ரம்ஸான் சிஹாப் தீன் உட்பட பல முஸ்லிம் பிரமுகர்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *