பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீனின் தந்தையின் ஜனாஸாவில் மு.கா தலைவர் றவூப் ஹக்கீம்
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.
அன்னாரின் ஜனாஸாவில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
ஜனாஸா நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை (18) அஸர் தொழுகையை அடுத்து புத்தளம் ரத்மல்யாய அல் காசிமீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)