அனுராதபுர மாவட்டத்தில் மூன்று மத்திய நிலையங்களில் அஹதிய்யா பரீட்சை.
அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளத்தினால் நடாத்தப்படும் அஹதிய்யா தேசிய சான்றிதழ் பரீட்சை 2024 இவ்வாண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் மூன்று மத்திய நிலையங்களில் எதிர்வரும் (22 ஆம் திகதி) சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அஹதிய்யா பாடசாலைகளின் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் தெரிவித்தார்.
இதனடிப்படையில் அந்நூர் அஹதிய்யா பாடசாலை அனுராதபுரம், தாருல் ஹிக்மா அஹதிய்யா நாச்சியாதீவு, அல் ஹுதா அஹதிய்யா தல்கஹவெவ, அல் மத்ரசத்துல் ஹுதா மதவாச்சி, அந் நஜாஹ அஹதிய்யா பாடசாலை கோவில்பந்தாவ ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் பரீட்சைகள் நடைபெறும்.
தாருல் இஸ்லாஹ் அஹதிய்யா பாடசாலை கஹட்டகஸ்திகிலிய மற்றும் கருவலகஸ்வெவ அந்நூர் அஹதிய்யா பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைகள் நடைபெறும்.
மடாடுகம அல் அரபா அஹதிய்யா , இஹலப்புளியன்குளம் அந் நஹ்லா அஹதிய்யா மற்றும் அல் அமீன் அஹதிய்யா மரதன்கடவல ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு மரதன்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்திலும் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
மேற்படி அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் குறித்த பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு செல்லுமாறு அனுராதபுரம் மாவட்ட அஹதிய்யா செயலாளர் எம்.ஆர்.எம்.ரனீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )