நிந்தவூர் மாணவி இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைத் தேர்வில் சித்தி
நிந்தவூர் 14ஆம் பிரிவை சேர்ந்த அலாவுதீன் ஹஸ்னத் அத்பா என்ற மாணவி 2024 டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை சட்டக் கல்லூரி நுழைவு பரிட்சையில் சித்தி பெற்று மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் நிந்தவூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5000க்கும் அதிகமான மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் 201 மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களுள் தமிழ்மொழி மூலமாக சுமார் 1500 மாணவர்கள் தோற்றியதில் ஆறு மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் மேழும் இவர்களுள் நிந்தவூரை சேர்ந்த அத்பா 252 புள்ளிகளை பெற்று இரண்டாம் நிலையை பெற்றுள்ளார்.
அலாவுதீன் அத்பா 2022 ஆம் ஆண்டு க. பொ. த உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் தோற்றி 3A சித்தகளைப் பெற்று கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சமூகப் பணி கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிந்தவூரின் முதலாவது மாணவியும் ஆவார்.
2023ம் ஆண்டு “சுற்றாடல் முன்னோடி செயற்பாட்டில்” ஜனாதிபதி பதக்கம் வென்றவர் என்பதோடு தற்போது பிரித்தானிய பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கை கிளை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து மேற்கொள்கின்ற இளம் தலைமுறையினரின் காலநிலை பாதைகள் செயற்பாட்டில் இணைப்பாளராகவும் குழுத்தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லது கமு / அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையில் இருந்து 2020 ம் ஆண்டு இரத்தினபுரி ருவன்புர தேசிய கல்லூரியில் நடைபெற்ற சுற்றாடால் பாசறையிலும் கலந்து கொண்ட மாணவியும் ஆவர்.
உயர் தரத்தில் கற்கும் போதே சட்டத் துறையை இலக்காக வைத்து கடும் எதிர்பார்ப்புடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றினாலும் ஒரு சில புள்ளிகளால் சட்ட பீடத்தை தவற விட்டாலும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சமூகப் பணி கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் சட்டத்தரணியாக மாற வேண்டும் என்ற இலக்கை கைவிடாமல் அதில் குறியாக இருந்து தனது விடா முயற்சியால் 2024 இல் இடம்பெற்ற சட்ட கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றி சித்தியடைந்தது தனது நீண்ட கால இலக்கை அடைய இம்மாதம் சட்டக் கல்லூரி
பிரவேசிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் மாணவியாக இருந்தாலும் சிறுபராயத்தில் இருந்தே தனது ஆளுமை வெளிப்படுத்தி வருகின்ற அலாவுதீன் அத்பா எதிர்காலத்தில் எமது சமூகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் சொத்தாகவும் மிளிர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
(சம்மாந்துறை ஜெஸீம் அலியார்)