ஓமான் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில், விஜித ஹேரத் பங்கேற்பு
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் நேற்று ஆரம்பமான இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் இலங்கையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க விஷேட உரையாற்றவுள்ளதுடன் , அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தியுள்ளார். இந்து சமுத்திர பிராந்தியத்தை சேர்ந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.