அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆரம்பம்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எனும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஒன்று நேற்று 16.02.2025 வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் அமைப்பு இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி சமுக சேவை வலையமைப்பின் 125 க்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
தலைவராக தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பொதுச் செயலாளராக தமிழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவா, பொருளாளராக இசாக் வருனி மற்றும் 14 செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்
100க்கும் மேற்பட்ட இளம் ஊடகவியலாளர் ஊடக நிறுவனங்களில் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகள், தொழில் நிரந்தரம் , சம்பளம் பதவி உயர்வு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தனர். அத்துடன் செயலாளர் சிவா அங்கு கருத்து தெரிவிக்கையில் இம் அமைப்பில் இணைந்துள்ள சகல ஊடகவியலாளருக்கு காப்புறுதித் திட்டம் வழங்கி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தலைவர் செந்தில் வேலவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்
பிராந்திய ஊடகவியலாளர் ஒர் பத்திரிகையின் அல்லது இலக்ரோனிக் ஊடகங்களின் முதுகெழும்பாக உள்ளனர் அவர்கள் பொருளாதாரப் பிரச்சனைகள்,, நோய்வாய்ப்பட்டால் ஊடகவியலாளர்கள் உதவுவதற்கு ஒர் அமைப்பில்லாமல் பலர் கடிதங்களை எழுதுகின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். வெளிநாட்டு தூதரகங்களை நாடி, நாம் உதவித் திட்டங்களை பெற்றுக் கொடுத்தல் , ஊடக அமைச்சரை சந்தித்தல், கிரிக்கெட் குழு, மகளிர் குழு என பல பிரிவுகளை ஏற்படுத்தி நாம் பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு இவ் அமைப்பின் உதவிகளைப் பெற்றுக் உதவுவதற்காக நாம் பாடுபட வேண்டும்.
மகளிர் ஊடகவியலாளர்கள் பிரச்சினைகள் மகளிர் இணைப்பாளர் ஒருவரை நியமித்தல் அண்மையில் ஒருவன் எனும் பத்திரிகையில் கடமையாற்றி தொழில்களை இழந்த 35 ஊடகவியலாளர்கள் பிரச்சனைகள் போன்ற பல்வேறு தொழில் பாதுகாப்பு தமது சட்டப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் இச் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்தனர்
முன்னாள் ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் காலம்சென்ற பாரதியின் உருவப் படத்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.








(அஷ்ரப் ஏ சமத்)