திருமலை ஐ.ம.சக்தி தலைவராக இம்ரான் மஹ்ரூப்
ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் கடந்த 14ஆம் திகதி இந்த நியமனம் வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
(எஸ் ஏ.பறூஸ்)