உள்ளூராட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்; சஜித் பிரேமதாச
2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம். சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும் வாக்குகளையும் வென்றெடுத்தோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டோம். தற்போது உள்ளூராட்சித் தேர்தல் வந்துள்ளது. இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு தற்காலிக கூட்டணி அல்ல கட்சிக்கென்று எந்த உறுப்பினர்களும் இல்லாத கடந்த மூன்று தேர்தல்களிலும் எமது கட்சி பேட்டியிட்டது. அப்போது இருந்த ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தனர்.
அவர்களில் 74 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பதவி பறிக்கப்படது. ஐக்கிய மக்கள் சக்தியினது அல்லது தொலைபேசி சின்னத்தினது பயணமென்பது தற்காலிகமான பயணமல்ல, இது நெடுதூர பயணமென இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.