புதிய விமானப்படைத் தளபதி தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வருகை
விமானப் படையின் 20 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள Air marshal Bandu Edirisinghe இன்று கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பள்ளிவாசல் தலைவர் ரியாஸ் சாலி உள்ளிட்ட நிர்வாகத்தினர் அவரை வரவேற்றனர்.
அங்குள்ள சியாரத்தை தரிசித்ததுடன் விசேட துஆ பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்.
அங்கு விருந்தினர்களுக்காக வைக்கப்பட்டுள்ள கையேட்டிலும் தனது வரவை பதிவு செய்து கையெழுத்திட்டார்.
தெவட்டகஹ பள்ளி நிர்வாகத்தினால் புதிய விமானப்படை தளபதிக்கு ஞாபகார்த்தமாக புனித குர்ஆன் பிரதி ஒன்றையும் கைளிக்கப்பட்டதுடன் புதிய தளபதியினால் நிர்வாகத்தினருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.




(ஏ.எஸ்.எம்.ஜாவித்)