வட மத்திய சுற்றுலா அபிவிருத்தி செயற்குழுக் கூட்டம்
வடமத்திய மாகாண சுற்றுலா அபிவிருத்தி செயற்குழு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை கூட்ட மட்டத்தில் நடைபெற்றது.
வடமத்திய மாகாணத்தில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மாகாண சுற்றுலா அமைச்சினால் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் அங்கு முன்வைக்கப்பட்டன . இதற்காக இந்த ஆண்டு மாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் 91 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாகாணத்தில் உள்ள சுற்றுலா இடங்களை உருவாக்குதல் , மாகாணத்தின் உணவுகள் மற்றும் கலாச்சார கூடங்களை அறிமுகப்படுத்துதல் , சுற்றுலாப் பயணிகள் மாகாணத்தைப் பற்றி அறிய கண்காட்சிகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் மாகாணத்தின் கவர்ச்சிகளை அவர்களுக்கு தெரிவிக்க சுற்றுலா பிரதிநிதிகளை வரவழைத்தல்.
இது தவிர மாகாணத்தில் உள்ள உள்ளூர் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதும் திட்டத்த்தில் அடங்கும்.இதன் கீழ் மல்வத்து ஓயா வில் படகு சேவையை ஆரம்பித்தல் , கும்பிச்சன்குளம் பகுதியை சுற்றுலா பகுதிகளாக அபிவிருத்தி செய்தல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு இளைப்பாறும் இடம் அமைத்தல், ஹபரணை குளம் சார்ந்த பகுதியை சுத்தப்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சவாரி சைவையை அமைத்தல் பொலன்னறுவை அரச பூங்காவை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்தல்.
அத்துடன் பொலன்னறுவை பண்டிவ மீன்பிடி கிராமத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழில் தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கு கல்வி கற்கும் இடமாக புதிய கலென்பிந்துனுவெவ வில் வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)