உள்நாடு

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு ஆலோசனை.தெரிவிக்கிறார் அமைச்சர் சரோஜா போல்ராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்துள்ளது.

குறித்த அமைப்பின் பிரதிநிகளுக்கும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அடங்கிய தூதுவுக்குழுவும் இது தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த நாட்டின் தேசிய செயல் திட்டத்தைப் இந்த குழு பாராட்டியதோடு குழந்தை திருமணம் மற்றும் உள்ளக வன்முறை அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து சரோஜா போல்ராஜ் அடங்கிய குழுவிடம் குறித்த அமைப்பு கேள்வியெழுப்பியது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 2022 இல் திருத்தப்பட்டது, ஆனால் சட்டத்தின் கூறுகள் குறித்து இன்னும் குறைகள் உள்ளன. குழந்தை திருமணத்தை தடை செய்வது உட்பட சட்டத்தை மேலும் திருத்த திட்டங்கள் இருந்ததா? என்றும் இலங்கைக்கான குறித்த குழுவின் அறிக்கையாளர் “யமிலா கொன்சாலஸ் பெரர்” கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புடன் நாட்டின் முதல் ஈடுபாடு இதுவாகும் என்பதால், இந்த மதிப்பாய்வு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து, அதன் திருத்தம் குறித்தும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பதற்கும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல துறைகளைக் கொண்ட குழுவை நிறுவுவதற்கும் மகளிர் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததாக சரோஜா போல்ராஜ் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *