புத்தளத்தில் இடம்பெற்ற அஹதிய்யா மாணவர்களுக்கான செயலமர்வு
புத்தளத்தில் உள்ள அஹதிய்யா பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவலக திணைக்களத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (15) புத்தளம் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் திணைக்களத்தின் புத்தளம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம்.எம் இப்ஹாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம் எஸ் அலா அஹமட், புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் எம்.எம்.எம் றியாஸ், செயலாளர் பாறூக் பதீன் மற்றும் உளவளத்துணை ஆலோசகர் மற்றும் மாணவர், பெற்றோர்களின் பயிற்சியாளர் எம்.என்.என்.எம் றமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமைத்துவம் தொடர்பாகவும் அதில் முகாமையாளர் என்பவருக்கும் தலைவர் என்பவருக்கும் இடையிலான தொடர்புகள் வேறுபாடுகள் என்பன பற்றிய விரிவுரைகளை வளவாளர் எம்.எஸ் அலா அஹமட் மற்றும் போதைப் பாவனை தொடர்பாகவும் அதில் இருந்து நாம் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவது போதைப் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விரிவுரையை உளவளதுணை ஆலோசகர் எம்.என்.என்.எம் றமீஸ் ஆகியோர் வளங்கியமை குறிப்பிடத்தக்கது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-19.20.17_843dc19b.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-19.20.16_32b8458b-1.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-19.20.17_b3312179-1.jpg)
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)