நீண்ட முயற்சியின் பின்னர் காங்கேயனோடை பிரதேசத்தில் மீண்டும் பஸ் சேவை ஆரம்பம்.
மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான காணப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பஸ் சேவை நீண்ட முயற்சியின் பின்னர் இன்று சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.ரஸீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு பஸ் போக்குவரத்து நிலைய முகாமையாளர் ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பஸ் சேவையை ஆரம்பித்து வைத்ததுடன் பிரதேச பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ் பஸ் சேவையானது தினமும் அம்பலாந்துரையில் இருந்து காங்கேயனோடை, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்றடையும்.
இப்பிரதேச மக்கள் பல ஆயிரம் ரூபாக்கள் மற்றும் நேர விரயம் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பலரது முயற்சியில் இவ் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




(எம்.பஹத் ஜுனைட்)