அரபு மொழித்தின போட்டியில் பங்கேற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை சர்வதேச அரபு மொழி தினத்ததை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி அரபு எழுத்தணி போட்டி நிகழ்ச்சி ஒன்றை அண்மையில் நடாத்தி இருந்தது.
அரபு மொழியின் அழகு, எழுத்தணியின் பாரம்பரியம் மற்றும் இதில் போட்டியாளர்களின் திறமைகளைப் பாராட்டுவதற்கான பரிசளிப்பு என்பன புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த இந்த போட்டியில் மூன்று பிரிவுகளாக 387 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) கலந்து கொண்டு அரபு எழுத்தணியின் முக்கியத்துவம் எனும் தொனிப்பொருளில் சிறப்புரை நிகழ்த்தினார்.






(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)