புத்தளம் மாவட்ட சிங்கள மொழி மூத்த ஊடகவியலாளர் விமலசேன நம்முனி காலமானார்
புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் விமலசேன நம்முனி 81 வது வயதில் காலமானார்.
1991 ஆம் ஆண்டு எத்த என்ற சகோதர மொழி பத்திரிகையுடன் தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த திரு விமலசேன அதன் பின்னர் திவயின, லக்பிம, லங்காதீப மற்றும் தினமின ஆகிய சிங்க மொழி பத்திரிகைகளின் மஹாவெவ பிராந்திய நிருபராகப் பணியாற்றினார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
மறைந்த திரு. விமலசேனவின் உடல் மஹாவெவ, லுனுஓயாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது அன்னாரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (15 ) மாலை 4.00 மணிக்கு மஹாவெவ பொது மயானத்தில் நடைபெற உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)