புத்தளம் கனமூலை பாடசாலையின் உதைபந்தாட்ட போட்டியும் பந்துகள் கையளிப்பும்
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்று வரும் இல்ல விளையாட்டு போட்டித் தொடரின் இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளின் ஆரம்பமும் பாடசாலையின் பழைய மாணவரும் கிரீன்லேன்ட் எக்ரோ எக்ஸ்போட் உரிமையாளருமான அஸ்ரின் அலாவுதீனினால் அதிபரிடம் ஒரு தொகை விளையாட்டு போட்டிக்குரிய பந்துகள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம் றிஸ்வான் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் என்.எம் நிப்ரான் உறுப்பினர்களான ஜே.எம் றிஸான், ஏ.ஜீ.எம் ஹிலால், எச்.எம் அஸ்வர், எம்.எச்.எம் றிஸ்வான், ஏ.டீ.எம் தாரிக் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-13-at-08.40.39_abe3c9bc.jpg)
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)