நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெரு வரவேற்பு
ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி இன்று (13) நாடு திரும்பினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீட் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாள் விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிந்தது.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது கலந்துரையாடினார்.
ஜனாதிபதியின் மூன்று நாள் விஜயத்துடன் இணைந்ததாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதி அமைச்சுக்கும் இலங்கைக்குமிடையில் முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துகொண்டார்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/479549597_1194583256003763_676821304329151381_n-1024x634.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/477519278_1194583356003753_4465801728846737695_n-1024x772.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/478487371_1194583212670434_2063412613929494266_n-1024x719.jpg)