உள்நாடு

“எந்நாட்டவர்க்கும் இறைவன்”நூல் அறிமுக விழா!

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ஜெயக்குமார் குமாரசுவாமி (கவிஞர் பாரதி பாலன்) எழுதிய திருவாதவூரர் மாணிக்கவாசகர்தம் “எந்நாட்டவர்க்கும் இறைவன்”
நூல் அறிமுக விழா (15) திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணம் ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை ஸ்ரீ பத்ர காளியம்மாள் தேவஸ்தான
பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திர குருக்கள் மற்றும் திருகோணமலை மறைமாவட்டம் ஆயர், ஆண்டகை பேரருட்திரு நோயேல் இம்மானுவேல் ஆகியோருடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம், இலங்கை, கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அறம் கூறும் மாணிக்க மாணிக்கவாசகர் அருட்பணி அ.அ.நவரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இவ்விழாவில் சல்லியம்பாள் மகா வித்தியாலய மாணவர்களின்
வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது.

தலைமை உரை மற்றும் வரவேற்பு உரையை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின்
தலைவர் கனக தீபகாந்தனும், நூல் அறிமுக உரையை திருமதி சௌ.சந்திரகலாவும் நிகழ்த்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(அபு அலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *