புத்தளத்தில் ரமழானை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான விஷேட சொற்பொழிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளை எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சமூக மாற்றத்தில் ஆசிரியர்களின் வகிபாகம் என்னும் கருப்பொருளில் ஆசிர்யர்களுக்கான விஷேட சொற்பொழிவு வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 4.30 மணிக்கு புத்தளம் வான் வீதியில் உள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்வின் கருத்துரையை ஓய்வு நிலை அதிபரும் அப்ரார் பவுண்டேஷன் இணைப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம் மன்சூர் நிகழ்த்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-13-at-08.41.45_93610b25.jpg)
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)