உலக உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர இன்று உரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, நேற்று (11) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதன்போது, இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்மார் லெடூரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.