உலகம்

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியாகிளப் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீனுக்கு வரவேற்பு

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா
கிளப் சார்பில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர், மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை கொழும்பிலிருந்து
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. என். எம். அமீன் 06.07.2025 வியாழக்கிழமை காலை திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார்.
அவருக்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் &மீடியா கிளப் சார்பில் திருச்சி கலையரங்கம் மாடியில் உள்ள கிளப் அலுவலகத்தில் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் &மீடியா கிளப் தலைவர் விடுதலை செந்தமிழினியன்
தலைமையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என்
எம். அமீன், இலங்கை தொழில் அதிபர் இஹ்ஸான் வாஹித் ஆகியோருக்கு
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிளப் செயலாளர் புதிய தலைமுறை திருச்சி மண்டல மூத்த செய்தியாளர் வி. சார்லஸ், கிளப் பொருளாளர் மக்கள் குரல் நாளிதழின் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களின் ஊடகம் பணிகளை குறித்து விளக்கினார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. என். எம். அமீன் கலந்து கொண்டு பேசியதாவது : இலங்கை நாட்டில் வந்த எனக்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் சார்பில் வரவேற்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இலங்கையில் கொரோனா காலத்தில் இந்திய அரசு பெருமளவு உதவிகளை செய்து வந்துள்ளது. இந்திய அரசுக்கு நாங்கள் என்றைக்கும் நன்றி உணர்வோடு இருப்போம்.

எங்களுக்கு முதலில் உதவி செய்வது எப்போதும் இந்தியா. அந்த வகையில் சமீபத்தில் கூட இந்திய அரசு பட்ஜெட்டில் இதுவரை இலங்கைக்கு ரூ. 300 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. அந்த அளவுக்கு எங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை செய்துள்ளது.

இலங்கை மற்றும் தமிழகம் நட்புடன் எப்போதும் இருக்க வேண்டும். ஊடகவியலாளர் நட்புறவு மிகவும் அவசியம் வேண்டும். ஆகையால் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்கிற முறையில் நீங்கள் இலங்கை நாட்டுக்கு வாங்க அங்கே எல்லாம் சங்களுடன் இணைந்து ஒரு கலந்துரையாடல் செய்து வருவோம். நீங்கள் இரண்டு கட்டங்களாக வாருங்கள் உங்களுக்கு அங்கே எல்லாம் உதவிகளை செய்து தருகிறோம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்கள் நாட்டில் உள்ள எல்லா விசயங்களை குறித்து கேட்டறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கையில் உள்ள சூழ்நிலை அங்குள்ள பத்திரிகையாளர்களுடைய நிலை குறித்தும் உரையாற்றினார்
மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஷ் கண்ணா, இணைச் செயலாளர் தீட்சத், மற்றும் சங்க உறுப்பினர்கள் வைகுண்டவாசன், வெங்கடேஷ், சுபைருதீன், பிரபாகரன், அப்துல் கரீம், முகமது அலி ஜின்னா, தினகரன், தினேஷ், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *