கொழும்பு அல் ஹிதாயாவில் நடைபெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடக பயிற்சி பட்டறை
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பாடசாலை சிரேஷ்ட மாணவர்களுக்கான 77வது திறன் மேம்பாட்டு ஊடகக் பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை 09, கொழும்பு அல்ஹிதாயா கல்லுாரியின் எம்.சி பஹருடீன், மண்டபத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஊடகப் பயிற்சி பட்டறையை மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்சாத் ஏ காதர் , பொதுச் செயலாளர் சாதிக் சிஹான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி பட்டறைக்கு வளவாளர்களாக ஊடகவியலாளர் ரிப்தி அலி, (விடியல் வெப் நியூஸ் ஆசிரியர், ) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செய்தி ஆசிரியர் ஜுனைத் எம் ஹாரிஸ் கெப்பிட்டல் தனியார் ஊடக வலையமைப்பின் பொது முகாமையாளர் ஷியா உல் ஹசன் தகவல் அதிகாரி அரச தகவல் திணைக்களம் , எம் பவாஸ், ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு நவீன தொழில்நுட்ப முறையில், சமூக ஊடகங்கள் போன்ற பயிற்சிகளை வழங்கினார்கள்.
இப்பயிற்சிக்கு கொழும்பு அல் ஹிக்மா, அல் ஹிதாயா, தெமட்டகொடை கைரியா கல்லுாரிகளிலிருந்து ஊடகத்துறை கற்கைகளை கற்கும் 100 சிரேஷ்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
பிற்பகல் சான்றிதழ் வழங்கு வைபவத்தில் பிரதம அதிதிகளாக மலேசியா உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் கவுன்சிலர் மொஹமட் ரியுமிங், , இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் முதல் செயலாளர் (ஊடகம் ,தகவல்,கலாச்சாரம் )நாவ்யா சிங்கா, ஆகியோருடன்
, கெளரவ அதிதிகளாக சமூக தீபம் எம்.சி.பஹரூடீன் தவிசாளர் சர்வதேச மனித உரிமைகள் குலோபல் மிஷன் எம்.ஏ.சி. மஹ்சூம், மற்றும் விசேட அதிதிகளாக அல்ஹிதாயா கல்லூரியின் அதிபர் ஏ.எப் ஸரூனா ஆமித், அல்ஹிக்மா கல்லுாரியின் அதிபர் எம் உசைன் மற்றும் பி.எம்.ஜ.கல்வி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பர்சாத் ஜமால் ஆகியோர்களுடன் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ சமத்)