காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டம்
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் திங்கட்கிழமை (10) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.நளீம், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம்.பி.எம் .பிர்தௌஸ் (நளீமி), பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் , நகசபை செயலாளர் ரிப்கா சபீன், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் திணைக்கள பிரதேச தலைவர்கள், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000670845-1024x749.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000670846-1024x577.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000670847-1024x577.jpg)
(எம்.பஹத் ஜுனைட் )