இன்று டுபாயில் ஆரம்பமாகும் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு
உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு இன்று டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.13 ம் திகதி வரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய அரபு குடியரசின் ஜனாதிபதி முஹம்மத் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் அந் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அந் நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை இம் மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலரையும் சந்தித்து நட்பு ரீதியான கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.