மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பகுதி நேர மின்வெட்டு நாளை (12) இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றும் (10 இன்றும் (11) நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.