திடீர் மின் தடைக்கு குரங்கு காரணமில்லையாம்; மின்சார வாரிய பொறியியலாளர் சங்கம் அறிக்கை
நாடு முழுவதும் நேற்று பகல் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கு காரணமில்லையென இலங்கை மின்சார வாரிய பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , மொத்த மின்சார உற்பத்தியில் பேரும் சதவீதம் நிலையற்ற சூரிய மின் சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது தான் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணமென இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரத்தில் மின்சார பாவினை குறைவாக இருப்பதும் மொத்த மின்சார உற்பத்தியில் பேரும் சதவீதத்தை வகிக்கும் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய மின் உற்பத்தியும் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.