இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்கள் குழுவினால் வீதி விபத்தை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வீதி விளம்பர பலகை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதி குமாரன் மற்றும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
வீதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான சமூக நிகழ்ச்சி திட்டம் இளம் ஊடகவியலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000669330-1024x768.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000669329-1024x576.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000669334-1024x768.jpg)
(எம்.பஹத் ஜுனைட்)