உள்நாடு

அழகிய கடற்கரையை கவர்ச்சியான சுற்றுலா தளமாக்கும் தேசிய வேலைத்திட்டம்

க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அடிப்படையில் அழகிய கடற்கரையை கவர்ச்சியான சுற்றுலா தளமாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வத்தளை முதல் நீர்கொழும்பு வரையுள்ள 20 கிலோமீட்டர் கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இன்று (09) தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதன் போது கலந்து கொண்டதுடன் பொலிஸ், விமானப்படை, நீர்கொழும்பு மாநகர சபை, கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என மூவாயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *