வட மத்திய ஆளுனர் தலைமையில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணி , நீர்ப்பாசனம் ,வீதி அபிவிருத்தி கிராம அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சின் முயற்சியின் கீழ் 50 % பங்களிப்பின் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் கிராம அபிவிருத்தி திணைக்கள வளாகத்தில் (08) இடம்பெற்றது.
வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களை சுயதொழில் செய்வதற்கு வழியமைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 157 பயனாளிகளுக்கு 80 தையல் இயந்திரங்கள்,79 ஜுக்கி ஓவலோக் இயந்திரங்கள், தண்ணீர் மோட்டர்கள் , புல் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் எண்ணெய் தெளிப்பான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க, மாகாண நீர்ப்பாசன, மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் அபயலட்சுமி ஹேவாபத்திரன , மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்