மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயது இளைஞன் பலி.
இபலோகம ரணஜய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இபலோகம ரணஜயபுர சந்தியில் இருந்து ரணஜய வீட்டுத் தொகுதி நோக்கிச் சென்ற நவீன மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் இபலோகம ரணஜயபுர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சானுக தேஷான் ஹேரத் என்ற திருமணமாகாத இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் கணேமுல்ல பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இணைப்பாளராக கடமையாற்றி வருவது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போதே குறித்த விபத்தில் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிசார் தெரிவித்தனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-09-at-21.07.52_0f60f67e.jpg)
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்