உள்நாடு

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” நூல் சாய்ந்தமருதில் வெளியீடு

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” நூலின் வெளியீட்டு விழா நேற்று (8) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அரங்காக இடம்பெற்றது.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கௌரவ அதிதிகளாக சபுத்தி தவிசாளர் கலாநிதி தமீர மஞ்சு, இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்ட முதுமாணி எச்.ஐ.எம். ஸஹ்பி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஓய்வுநிலை அதிபர் திருமதி அ. பேரின்பராஜா, சபுத்தி பொதுச்செயலாளர் திருமதி இரோசானி கல்ஹேன ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி அமரசிரி விக்கிரமரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். அப்துல் ரசாக், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர் மற்றும் சிரேஷ்ட எழுத்தாளர் செங்கதிரோன் ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றியதோடு, கல்விமான்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், நூலாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட இன நல்லுறவைப் பேணும் வகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

2024 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதை நூல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *