ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பாடசாலை மாணவர்களுக்கான ”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை”
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊடக கழகங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 77ஆவது
”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை” 2025.02.09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள அல் ஹிதாயா கல்லூரியில் இடம்பெறவுள்ளது .
மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம் அமீன் தலைமையில் , நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறை
முழு நாள் பயிற்சியாக இடம் பெறவுள்ளது
கொழும்பு -10, அல் ஹிதாய கல்லூரியில் இடம்பெறும் இந்த பயிற்சி பட்டறையில் கொழும்பு 10, அல் ஹிதாயா கல்லூரி , கொழும்பு 09 – கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு – 12, அல் ஹிக்மா கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகளும், ஊடக கழக பொறுப்பாசிரியர்களும் கலந்து பயன்பெறவுள்ளனர்.
இந்ந பயிற்சி பட்டறையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ். ஏ. எம். பவாஸ், கெபிடல் தொலைக்காட்சி / வானொலியின் பொது முகாமையாளர் ஸியா உல் ஹஸன், விடியல் இணையதள ஆசிரியர் ரிப்தி அலி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முன்னாள் செய்தி ஆசிரியரும் , ஊடக பயிற்று விப்பாளருமான ஜுனைட் எம் ஹாரிஸ் ஆகியோர் இந்த முழு நாள் பயிற்சியின் வளவாளர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார் .
இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ் வு மாலை 3.45 மணிக்கு அல் ஹிதாயா கல்லூரியின் எம் சி பஹார்டீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கையிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் கொன்சியூலர் மொஹமட் டுமிங் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் (ஊடகம் , தகவல் , மற்றும் கலாசார ) முதலாவது செயலாளர் திருமதி நவ்யா சிங்ளா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர் .
அத்துடன், முஸ்லிம் மீடியா போரத்தின் நலன் விரும்பி சபை உறுப்பினர்களான லங்கா அக்ரோ நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் எம். சி. பஹார்டீன் மற்றும் சர்வதேச மனித உரிமை குளோபல் மிஷனின் தலைவரான தொழிலதிபர் அல் ஹாஜ் எம். ஏ சி . மஹ்ஸூம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .
மேலும் விசேட அதிதிகளாக அல் ஹிதாயா கல்லூரியின் அதிபர் திருமதி ஏ. எப். ஸரூனா, அல் ஹிக்மா கல்லூரி கல்லூரியின் அதிபர் ஜனாப் எம். எம். எம் ஹுஸைன், கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஜுமானா நிஸாம்
போரத்தின் ஆலோசகர்கள்,
நிறைவேற்று குழு உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் .
போரத்தின் தேசிய அமைப்பாளர் மனித நேயன் இர்ஷா ஏ காதர் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டமை குறிப்பிட தக்கது .