மஸ்ஸல பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்
பேருவளை மஸ்ஸல பிரிமியர் லீக் விளையாட்டுக் கழகம் மஸ்ஸல பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணத்திற்காக ஏற்பாடு செய்துள்ள கிரிக்கட் சுற்றுப் போட்டி 8ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது.
பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான இச்சுற்றுப் போட்டி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், 12 ஆம் திகதி புதன் கிழமையும் தொடர்ந்து இடம்பெறும்.
இச்சுற்றுப் போட்டிக்கான கிண்ணம் அறிமுக நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை (2025-02-08) காலை கெச்சிமலை தர்கா வளவில் மேற்படி கழக தலைவரும், மஸ்ஸல ரஹ்மானிய்யா பள்ளிவாசல் தர்மகர்த்தாவுமான முஹம்மத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இச்சுற்றுப் போட்டியில் மஸ்ஸல கிராமத்தைச் சேர்ந்த 16 கிரிக்கட் அணிகள் பங்குபற்றுவதோடு, இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 12ஆம் திகதி மாலை நடைபெறும்.
(பேருவளை பீ.எம் முக்தார்)