மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
கம்பஹா – மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.