பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்.
இதன்படி, பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரை மாத்திரமே அழைத்து வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு எந்தவொரு விருந்தினர்களையும் அழைத்து வரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற அரங்கம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.