புத்தளம் அஹதிய்யா மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியும் மனவள ஆற்றல் மேம்பாட்டு போட்டியும்
புத்தளம் பாத்திமா அஹதிய்யாவின் ஏற்பாட்டில் புத்தளம் வை.எல்.டீ.பீ (YLDP) தன்னார்வ தொண்டர் குழுவின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியும் மனவள ஆற்றல் மேம்பாட்டு போட்டி நிகழ்வும் அடங்கிய விஷேட பயிற்சி முகாம் ஒன்று புத்தளம் சாரா நீச்சல் தடாக மையத்தில் அஹதிய்யாவின் அதிபர் திருமதி மபாஹிரா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 70 க்கும் மேற்பட்ட அஹதிய்யா மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதுடன் அஹதிய்யாவின் பிரதி அதிபர் திருமதி. ரினூசா மற்றும் ஆசிரியர்கள்களும் கலந்து சிறப்பித்ததாக புத்தளம் வை.எல்.டீ.பீ (YLDP) தன்னார்வ தொண்டர் குழுவின் தலைவர் அஸ்ரிக் தெரிவித்தார்.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)