அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் மாற்றுத் திறனாளிகளுக்கான அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்கில் இன்று 05.02.2025 புதன்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை ஸாஹிரா ஆரம்ப தேசிய பாடசாலையில் பாடசாலையின் அதிபர் முஹ்சி அவர்களின் தலைமையில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிள்ளைகள் மிக சந்தோஷத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கும் அ.இ.ஜ.உலமா புத்தளம் நகரக் கிளையின் சான்றிதழ்களும்(Chocolate) இனிப்பு வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மற்றும் இதில் கடமை புரியும் ஆசிரியைகளையும் அ.இ.ஜ. உலமா புத்தளம் நகரக் கிளை கெளரவப்படுத்தி அவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கியது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் அ.இ.ஜ.உ. உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்வி உபகுழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை.