பாணந்துறை கவிதா வட்டத்தின் ஆறாவது கவிதை அரங்கம்
பாணந்துறை கவிதா வட்டத்தின் (பாகவம்) ஆறாவது கவிதை அரங்கம் பாணந்துறை ஊர்மனை ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள கவிஞர் முனாஸ் கனியின் இல்லத்தில் அவரது தலைமையிலும் பாகவத்தின் தலைவர் கலைமதி யாஸீன் முன்னிலையிலும் கடந்த வாரம் நடைபெற்றது.
அதில் கலைமதி யாஸீன், அல் அஸ்லம், எஸ்.எச்.எம். நவ்பல், மஸீதா அன்ஸார், மஸாஹிறா கனி, கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், எஸ்.எம்.நளீம், எச்.எப்.ரிஹ்லா (ஜீலான் ம.க. மாணவி) ஆகியோர் கவிதை படித்தனர்
கெசல்வத்த பிரதேச சிங்கள மொழிக் கலைஞர்களாகிய மஞ்சுள மத்துமகே,சேன சமன் குணதிலக, வசந்த குமார ஆகியோரும் இறுதிவரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மஞ்சுள மத்துமகே சிங்கள மொழியில் கவிதையொன்றை முன்வைத்ததோடு, சிற்றுரையொன்றையும் நிகழ்த்தினார். இருமொழிக் கவிஞர்களும் ஒன்றிணைந்த கவியரங்கொன்றை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
அம்பலாந்துவையைச் சேர்ந்த ரிஸ்மினா பளீல், அல்பஹ்ரியா.ம.க. 9ம் தர மாணவி ஆதிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



(ஏ. எல். எம். சத்தார்)