தேசத்தின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
புத்தளம் ரத்மல்யாய கிராமத்தில் பார்வைக் குறைபாட்டினால் அவதியுற்றுள்ள மக்களின் நலன் கருதி தேசத்தின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஒன்று றத்மல்யாய மருத்துவ நிலையத்தில் அமைப்பின் தலைவர் பாஸில் தலைமையில் இடம்பெற்றது.
இம் மருந்து முகாமில் அதி நவீன உபகரணங்களின் உதவியுடன் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் சலுகை அடிப்படையில் மூக்கு கண்ணாடிகள் அன்றைய தினமே வழங்கப்பட்டது. இதில் 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் இவ் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)