ஆரம்ப சுகாதார வலுவூட்டலுக்கு அரசாங்கம் முன்னுரிமை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
ஆரம்ப சுகாதார வலுவூட்டலுக்கு உயர் சுகாதார துறைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதற்காக விசேட செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு இது தொடர்பான முன்னேற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பிரதான அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளின் நோயாளர்களின் நெரிசலை குறைக்கும் வகையில் கிராமப்புற வைத்தியசாலைகளின் தேவையான மனித மற்றும் பெளதீக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த வைத்தியசாலைகளை வலுவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஆரம்ப சுகாதார சேவைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் சேவையை தொடர்ந்து பேண வேண்டும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பல வைத்திய சாலைகளும் இந்த இரண்டு மாவட்டங்களுடனான மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களிலும் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் பின்னர் பேசும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.
இங்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலை பொலன்னறுவை பொது வைத்தியசாலை சீனா சிறிலங்கா நட்பு சிறுநீரக வைத்தியசாலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் உள்ள மனித மற்றும் பெளதீக வளங்களின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)