விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட 15 மாணவர்களுக்கு ஒவ்வாமை
சிவலக்குளம் குட்டிக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட பதினைந்து சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக (05) அனுராதபுரம் பிரிமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிவலக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த பாடசாலையில் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குடிக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்களுக்கு வயிற்றில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)