புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் மாபெரும் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது புத்ளக் கல்வி வளையத்தினுள் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கௌரவிப்பு விழாவை இன்று (04/02/2025) IBM மண்டபத்தில் அனைவரும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடத்தியது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக நீர்வளங்கள் மற்றும் மாநில உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு.ஏ.சி.எம். நபீல் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.வீ.சிவலோகதாசன், முஸ்லீம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களின் முன்னாள் பணிப்பாளர் திரு .எம்.ஆர்.மலிக் , புத்தளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ஏ.எஸ்.எம். அஸ்மில், பட்டய சிவில் பொறியியயாளர் என்.கே.எம் . நன்சீர், புத்தளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எம்.எப்.எம். ரியாஸ் ஆகியோரும் பல்வேறு விசேட அதிதிகள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டதுடன் புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் தலைவர் எம்.என். நப்ரான் தலைமையில் சிறப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அதேபோல இந்த நிகழ்வில் துறை சார் நிபுணர்களைக் கொண்டு குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதேபோல புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஊக்குவிப்பு பேச்சாளரும் ஆகிய எம். ஆர்.எம். ஷவ்வாப் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பேச்சை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பிரதித் தலைவர் ஆர். ரோஷன் நன்றியுடன் நிறைவு பெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை தொடராக ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.