“நாம் இலங்கையர்கள்” எனும் தொனிப் பொருளில் நாச்சியாதீவில் சுதந்திர தின விழா
இலங்கை தாய் நாட்டின் 77வது சுதந்திர தின நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் விஷேட நிகழ்வு நாச்சியாதீவு ஜும்மா பெரிய பள்ளிவாயல் முன்னாலுள்ள பிரதான வீதி அருகில் அந் நூர் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் 2025.02.04 இடம்பெற்றது. நாம் இலங்கையர்கள் என்ற தொனிப்பொருளில் அமைப்பின் தலைவர் அர்ஷாத் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் விஷேட அதிதிகள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்ததோடு அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக அனைவருக்கும் தேனீர் உபசாரம் வழங்கப்பட்டது. அந்நூர் சமூக சேவைகள்
அமைப்பின் 10ஆவது ஆண்டினை (2015 – 2025) முன்னிட்டு ஆண்டு நினைவு இலட்சினை( Anniversary Logo) அமைப்பினால் உத்தியோகபூர்வமாக இந்நிகழ்வில் வெளியிப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நாச்சியாதீவு ஜும்மா பள்ளி நிர்வாக சபை பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தது
பல்லினச் சமூக கட்டமைப்புக்குள் சிறுபான்மையினராக வாழுகின்ற முஸ்லிம்கள் இவ்வாறான தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவது அப்பிரவேசத்தில் பெரும்பான்மை சமூகத்தினால் பாராட்டப்பட்டது.
(அந் நூர் இளைஞர் சமூக சேவை அமைப்பு – நாச்சியாதீவு)